பசு தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமடையும்.., இந்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து
பசு தொழுவத்தை சுத்தம் செய்து, அங்கேயே உறங்கி வந்தால் புற்றுநோய் குணமாகும் என்று உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் சிங் கங்குவார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சர்ச்சை பேச்சு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, கரும்பு வளர்ச்சித் துறைக்கான அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிங் கங்குவார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட பசு காப்பகத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தினமும் காலையும், மாலையும் ரத்த அழுத்த நோயாளிகள், பசுவின் முதுகில் தடவி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ரத்த அழுத்த மருந்துகளின் அளவை 10 நாட்களுக்குள் பாதியாகக் குறைக்க முடியும்.
அதாவது ஒருவர் ரத்த அழுத்தத்திற்கு 20 மி.கிராம் மருந்தை எடுத்துக் கொண்டால், 10 நாட்களுக்கு பிறகு 10 மி.கிராம் எடுத்துக்கொண்டால் போதும்.
பசு தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே படுத்துறங்கி வந்தால் புற்று நோய் குணமாகும். பசுவின் சாணத்தை கொசுக்களை ஒழிக்க முடியும்.
பசு சம்மந்தமான பொருட்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார். இவர் பேசிய கருத்து தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |