ஜூன் 30க்குள் இதை செய்யாவிட்டால்... பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
பிரான்சில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பிருந்து வாழ்ந்துவரும் பிரித்தானியர்களுக்கு இன்னும் சில நாட்களுக்குள் முடிக்கவேண்டிய ஒரு முக்கிய பணி உள்ளது. ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள், அவர்கள் பிரெக்சிட்டுக்குப் பிந்தைய வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்திருக்கவேண்டும்.
அப்படி அவர்கள் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றின் இரட்டைக் குடியுரிமை பெற்றிருப்பவர்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் தவிர்த்து மற்றவர்கள் carte de séjour என்னும் இந்த வாழிட உரிமத்துக்கு 2021 ஜூன் 30க்கு முன் விண்ணப்பிக்காவிட்டால் அவர்கள் பிரான்சில் வாழும் உரிமையை இழக்க நேரிடும் என பிரான்சுக்கான பிரித்தானிய தூதர் Ed Llewellyn எச்சரித்துள்ளார்.
ஜூன் 30க்குள் வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கத் தவறும் பிரித்தானியர்கள் சட்ட விரோத புலம்பெயர்ந்தோராக கருதப்படுவார்கள்.
அவர்களால் பிரான்சில் வேலை செய்யவோ, மருத்துவ உதவி பெறவோ, சட்டபூர்வமாக வீடு
வாடகைக்கு எடுக்கவோ கூட முடியாது.
வாழிட உரிமம் இல்லாதவர்கள், காலக்கெடு முடிந்ததும் பொலிசாரால் சுற்றி
வளைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்.
மேலதிக தகவல்களுக்கு...