தினமும் விடாமல் இந்த ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளவென மின்னும்!
ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு. இதிலிருக்கும் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.
நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், வைட்டமின் ஏ,வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் அமைந்துள்ளன.
மேலும், செம்பு, அயோடின்,மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிளவனாய்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக செயல் படுகிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் சக்தி உள்ளது. இது கேன்சர்வருவதை தடுக்க பயன்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி பழச்சாறு அருந்தினால் பற்களில் கரை ஏற்படுவதை தடுக்கிறது..
வயிறு நலம், செரிமான சக்தி
ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் ஸ்டராபெரி பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் ஸ்ட்ராபெரி பழம் பேருதவி புரிகிறது.
சருமப் பொலிவு
ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்ற்ம் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
தேமல்
சருமத்தில் எங்கேனும் நிறம் மாறுபட்டிருந்தாலோ அல்லது தேமல், மரு போன்றவை வந்திருந்தாலோ இதனை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரிகூலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைத்திடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.
வெண்மை பற்கள்
கறை படிந்த பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரியை அரைத்து டூத் வொயிட்னராக அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலிருக்கும் விட்டமின் சி பற்களை வெண்மையாக்குவதுடன் ஈறுகளை உறுதியாக்கும்.
டோனர்
ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து பீரசிரில் வைத்திடுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதனை முகத்தில் தேய்த்து வர ஸ்ட்ராபெர்ரி சிறந்த டோனராக செயல்படும்.
எலும்புகள்
அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். அடிக்கடி ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் எலும்புகளில் இருக்கும் காரைகள் மிகவும் வலுவடையச் செய்து, சுலபத்தில் எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
பொடுகு
பொடுகுத் தொல்லை அதிகமிருந்தால் ஸ்ட்ராபெர்ரி பழக்கூலுடன் தேயிலை மர எண்ணெய் இரண்டு டீஸ்ப்பூன் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகுத் தொல்லை ஒழிந்திடும், வாரம் ஒரு முறை இப்படிச் செய்யலாம்.