அவரை தின்றான், அவரைத்தின்றான்: ஓர் எழுத்தை விட்டால் எல்லாம் போச்சு
தமிழெங்கள் உயிருக்கு நேர்: வழங்குவது uchchi.com
நமது தாய்மொழியான தமிழ், நுட்பம் மிகுந்தவொரு மொழி. பல்லாண்டு காலம் வல்லோர் பலரால் வளர்க்கப்பட்டு வாடாதிருக்கும் வளன் மிகுந்த பயிர்.
இதன் காரணமாகவே நாம் தமிழை மிகுந்த அக்கறையோடு பயில வேண்டும். ஓர் ஒற்றெழுத்தைத் தவற விட்டு விட்டாலோ அல்லது தேவையின்றிச் சேர்த்தாலோ சொல்ல வந்த பொருள் தலைகீழாக மாறிவிடும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
பின்வரும் எடுத்துக்காட்டைப் பாருங்கள்:
அவரை தின்றான்
அவரைத் தின்றான்
அவரை தின்றான் என்றால் அவரையைத் தின்றான் – அவரைக்காயைத் தின்றான் - என்று பொருள். காய் அதன் செடிக்கு ஆகி வந்தது (ஆகுபெயர்).
அவரைத் தின்றான் என்றால் சுட்டப்படும் மனிதரை (அவர்) ஒருவன் தின்றான் என்று பொருள்.
ஓர் எழுத்தைச் சேர்த்ததும் பொருள் எப்படி மாறுகிறது பார்த்தீர்களா?
எங்கே ஒற்றெழுத்து இட வேண்டும் – எங்கே தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி முதலான இலக்கண அடிப்படைகளைச் சரிவர அறிந்திருக்க வேண்டும்.
அவன் கொன்றான்
அவனைக் கொன்றான்
அவனால் கொன்றால்
மூன்று தொடரும் வெவ்வேறு பொருள் தருகின்றன. அவன் என்ற பெயர்ச்சொல்லோடு ‘ஐ’ என்ற உருபு சேரும்போதும் ‘ஆல்’ என்ற உருபு சேரும்போதும் பொருள் வேறு படுகிறது. இப்படிப் பொருளை வேறுபடுத்துவதன் காரணமாக அது வேற்றுமை உருபு என்று அழைக்கப்படுகிறது.
இன்னோர் எடுத்துக்காட்டினைப் பாருங்கள்
பாவை படித்தாள் – பாவை போன்றிருக்கும் பெண் படித்தாள் எண்று பொருள்.
பாவைப் படித்தாள் – பாடலை அவள் (தோன்றா எழுவாய்) படித்தாள் என்று பொருள்.
இப்படியான இலக்கண அடிப்படைகளை அறிந்து கொள்ள uchchi.com இல் பாவலர் மதுரன் தமிழவேள் உருவாக்கியுள்ள ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ என்ற கற்கை நெறியோடு இணைந்து கொள்ளுங்கள். ஆண்டொன்றுக்கான கட்டணம் $30 மட்டுமே. https://uchchi.com/courses/அடிப்படைத்-தமிழ்-இலக்கணம/