மூளை நோயால் பாதிக்கப்பட்ட போதிலும்.., 3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்ற IFS அதிகாரி
மூளை நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் தனது கடினமான உழைப்பின் மூலம் பெண் ஒருவர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
யார் அவர்?
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதான வேலை அல்ல. அதற்கு இடைவிடாத கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. இருப்பினும், தேர்வில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று பலரும் முன்னுதாரணமாக இருக்க்கின்றன.
அப்படி ஒருவர் தான் ஐ.எஃப்.எஸ் அதிகாரி அனிஷா தோமர் (IFS officer Anisha Tomar). இவர், தனது சொந்த போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களைச் சந்தித்த போதிலும், தனது மூன்றாவது முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவரது பயணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சிறு வயதிலிருந்தே, அனிஷாவுக்கு கற்றல் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுவே அவரது எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்ற அனிஷா, UPSC CSE தேர்வுக்குத் தயாரானார். 2016 ஆம் ஆண்டில், UPSC தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
பின்னர், ஒரு பாடத்திட்டத்தைத் தயாரித்து தினமும் பின்பற்றினார். இதையடுத்து, தனது முதல் முயற்சியிலேயே குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்தார்.
இருப்பினும், சோர்வடையாமல் இலக்குகளை அடைய வேண்டும் என்ற உறுதி கொண்டார். பின்பு, 2018 ஆம் ஆண்டில், மீண்டும் UPSC தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.
ஆனால், இந்த முறை அனிஷாவுக்கு இடியோபாடிக் இன்ட்ராக்ரானியல் ஹைப்பர் டென்ஷன் (IIH) என்ற ஒரு வகையான மூளை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மருந்துகள் எடுத்துக்கொண்டு 2020 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக UPSC தேர்வில் பங்கேற்று அகில இந்திய ரேங்க் (AIR) 94 ஐப் பெற்றார். பின்னர், அனிஷா ஒரு IFS அதிகாரியாக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |