செய்தியாளர் சந்திப்பில் சிரித்த ஐஜி ரம்யாபாரதி; AI வீடியோவா? உண்மையா?
செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னர் ஐஜி ரம்யாபாரதி குலுங்கி குலுங்கி சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூலூர் சிறுமி வழக்கு
கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே 22 திகதி காணாமல் போன 10 வயது சிறுமி, மறுநாள் மாலையில் அருகிலிருக்கும் குளக்கரை ஒன்றில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாள்.
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக கார்த்தி, மோகன்ராஜ் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்யாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் எனவும், குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சிரித்த ஐஜி ரம்யாபாரதி
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக அவர் குலுங்கி குலுங்கி சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.
ஆனால் இந்த வீடியோ AI என சிலர் மறுப்பு தெரிவித்த நிலையில், இது உண்மையான வீடியோதான் என அங்கிருந்த செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Clarification :
— YOGESHWARAN V T (@YOGESHWARANVT1) May 24, 2026
இது AI விடியோ இல்லை!
கோவை சிறுமி கொலை வழக்கில், ஐ.ஜி ரம்யா & உயர் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பின் போது சிரித்து கொண்டே இருந்த #JAYAPLUS நேரலை விடியோ வைரலானது. இது AI விடியோ என சிலர் கூறி வரும் நிலையில், இது AI விடியோ அல்ல நேரலையில் நிகழ்ந்தது ஆகும். pic.twitter.com/Ww1pTxfXxF
3;30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேரலை செய்வதற்காக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கேமரா உடன் 3 மணிக்கு முன்னதாகவே சென்று ஐஜி அலுவலகத்தில் குவிந்தனர்.
3 மணியளவில் வந்த ஐஜி ரம்யாபாரதி, மற்ற அதிகாரிகள் வரும் வரை பேட்டியளிக்காமல் காத்திருந்தார். அதுவரை கையில் வைத்திருந்த செய்தி அறிக்கையை படித்துக் கொண்டிருந்தார்.
3;25 மணிக்கு அதிகாரிகள் வந்த பின்னர், வழக்கு குறித்து பேச வேண்டுமென கூறி, ஆடியோவை அணைத்து விட்டு செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அறைக்கு வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
அப்போது ஐஜி ரம்யாபாரதி சிரித்துக்கொண்டிருந்த வீடியோ அங்குள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது.
ஒரு சென்சிட்டிவான வழக்கை கையாளும் அதிகாரி இப்படி சிரித்துக்கொண்டிருக்கலாமா என சமூகவலைத்தளங்களில் அவரின் செயல் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
மேலும், செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது முடித்துக்கொள்ளலாமே என செய்தியாளர் சந்திப்பை முடிப்பதிலே மும்முரம் காட்டியதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |