பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த நம்பர் 1 வீராங்கனை! ஆனால் வருத்தம் தெரிவித்த பெலாரஸ் வீராங்கனை
பாரீஸ் ஒலிம்பிக்கில் நடந்த டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) வெண்கலம் வென்றார்.
ஸ்வியாடெக் சாதனை
33வது ஒலிம்பிக் போட்டி பாரீஸில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோல்வியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் சுலோவாகிய வீராங்கனை அன்னா கரோலினாவை எதிர்கொண்டார் இகா ஸ்வியாடெக்.
இப்போட்டியில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஒலிம்பிக் டென்னிஸில் பதக்கம் பெற்ற முதல் போலந்து வீராங்கனை எனும் சாதனையை ஸ்வியாடெக் படைத்தார்.
அரினா சபலன்கா வருத்தம்
இந்த நிலையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலன்கா (Aryna Sabalenka) வெண்கலம் வென்ற ஸ்வியாடெக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''வீராங்கனைகள் (Vekic மற்றும் Zheng) குறித்து மோசமாக கூற நான் விரும்பவில்லை. நேர்மையாக கூறுகிறேன், ஸ்வியாடெக் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தேன். அது பாரீஸ், அவருக்கான இடம் அது.
எனினும், அந்த பெண்கள் நம்பமுடியாத டென்னிஸ் விளையாடுகிறார்கள். இந்த இறுதிப்போட்டியைப் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போட்டி பாரிய போராக இருக்கும் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |