இன்ஃபோசிஸ் வேலையை விட்டுவிட்டு... பால் விற்றே 5000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்
அதிக சம்பளம் தரும் இன்ஃபோசிஸ் வேலையை விட்டுவிட்டு சுத்தமான பால் விற்கும் நிறுவனம் ஒன்றை நிறுவி, தற்போது இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் ஒருவர்.
அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலை
சக்ரதர் காடே, இன்ஃபோசிஸின் முன்னாள் ஊழியரான இவர் சுத்தமான பால் விற்பனைக்காக அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டார். 2013 மே மாதம் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்ட சக்ரதர் காடே சுத்தமான பால் விற்கும் பொருட்டு நிறுவனம் ஒன்றை இன்னொருவருடன் இணைந்து நிறுவினார்.
பொறியியல் பட்டதாரியான சக்ரதர் கடே 2004ல் இருந்தே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் ஐஐஎம் இந்தூரில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
இந்த நிலையில் தான் பல லட்சம் சம்பளத்திற்கு, அதுவும் துணைத் தலைவர் பதவியுடன் Indxx Capital Management நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கே சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றிய அவருக்கு, இது தமக்கு பொருத்தமான பணி அல்ல என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்.
சுத்தமான பாலை மக்களின் வீடுகளுக்கே
அப்போது தான் நிதின் கௌஷல் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நெருக்கமான நண்பர்களாகினர். அத்துடன், இருவரும் ஒன்றாக இணைந்து தொழில் தொடங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கினர்.
முதல் இரண்டு ஆண்டுகள் அவரும் நிதினும் தங்களது Country Delight என்ற நிறுவனம் சார்பில் சுத்தமான பாலை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினர். தொடக்கத்தில் சத்ரகர் கடேவின் இந்த முயற்சிக்கு குடும்பத்தினர் மத்தியில் மனஸ்தாபங்கள் இருந்தாலும், அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
தற்போது ஒரு மாதத்தில் 5 கோடி பால் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். அத்துடன் இவர்களுடன் பால் விநியோக பங்காளிகள் என 6,000 பேர்கள் இணைந்துள்ளனர்.
டெல்லி, மும்பை, சென்னை உட்பட மொத்தம் 15 நகரங்களில் இவர்களின் Country Delight நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2022ல் மட்டும் Country Delight நிறுவனம் 600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது 5,000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |