ரூ.1 கோடி ஊதியத்தை உதறிவிட்டு கணவருடன் உருவாக்கிய நிறுவனம்: பிரமிக்க வைக்கும் கதை
கொல்கத்தாவை சேர்ந்த வினிதா சிங் மற்றும் கௌசிக் முகர்ஜி தம்பதியின் SUGAR Cosmetics நிறுவனம் குறுகிய காலத்தில் ரூ.4000 கோடி சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
காதலித்து திருமணம்
கடந்த 2015ல் வினிதா சிங் மற்றும் கௌசிக் முகர்ஜி தம்பதி தங்களது SUGAR Cosmetics என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். மட்டுமின்றி, Shark Tank India என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் வினிதா சிங்.
இவர் மட்ராஸ் ஐ.ஐ.டியில் பொறியியல் பட்டம் பெற்றவர். MBA பட்டப்படிப்பின் போது சந்தித்துக்கொண்ட இருவரும், பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
Goldman Sachs மற்றும் McKinsey & Company ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ள கெளசிக் 2011ல் வினிதாவை திருமணம் செய்துள்ளார். 2015ல் துவங்கப்பட்ட SUGAR Cosmetics நிறுவனத்தில், அதே ஆண்டு மட்டும் 52 லட்சம் ஆதாயம் பார்த்துள்ளனர்.
சொத்து மதிப்பு 300 கோடி
விற்பனை சதவீதம் அதிகரிக்க 2017ல் 11 கோடி என பதிவு செய்த நிலையில் 2020ல் விற்பனை 105 கோடியை எட்டியது. தொடர்ந்து 2022ல் 50 மில்லியன் டொலர் முதலீடு ஈர்த்த நிலையில், தற்போது SUGAR Cosmetics நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,000 கோடி என்றே கூறப்படுகிறது.
மேலும், தலைமை நிர்வாக அதிகாரியான வினிதாவின் சொத்து மதிப்பு மட்டும் 300 கோடி என்றே தெரியவந்துள்ளது.
மட்ராஸ் ஐ.ஐ.டியில் பொறியியல் பட்டம் பெற்ற வினிதாவுக்கு ரூ.1 கோடி ஊதியத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்க, அதை நிராகரித்துவிட்டு, தமது கனவுத் திட்டமான SUGAR Cosmetics நிறுவனத்தை கணவருடன் இணைந்து துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |