சுந்தர் பிச்சை, மார்க் ஜுக்கர்பெர்க்கை விட அதிக சம்பளம் வாங்கும் நபர்... அவர் வேலை பார்ப்பது
அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியல் ஒன்றை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பிரபல CEOக்களை விடவும்
குறித்த பட்டியலில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரியான நிகேஷ் அரோரா, கூகிளின் சுந்தர் பிச்சையை விடவும், மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க்கை விடவும் அதிக சம்பளம் வாங்குவதாக தெரிய வந்துள்ளது.
Palo Alto Networks நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவரும் நிகேஷ் அரோரா, அதிக சம்பளம் வாங்கும் CEOக்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார்.
அவர் ஆண்டுக்கு 151.43 மில்லியன் டொலர் சம்பளமாக பெறுகிறார். பரவலாக அறியப்படும் பல பிரபல CEOக்களை விடவும் நிகேஷ் அரோரா அதிக சம்பளம் வாங்குகிறார்.
முதலிடத்தில் Broadcom நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Hock Tan உள்ளார். அதே வேளை மார்க் ஜுக்கர்பெக் ஆண்டுக்கு 24.40 மில்லியன் டொலர் மட்டுமே சம்பளமாக பெறுகிறார்.
கூகிள் மற்றும் SoftBank
சுந்தர் பிச்சை ஆண்டுக்கு ரூ 1,674 கோடி சம்பளமாக மட்டும் பெறுகிறார். டெல்லியில் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட நிகேஷ் அரோரா, IIT-BHUவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
Palo Alto Networks நிறுவனத்தில் இணையும் முன்னர் கூகிள் மற்றும் SoftBank ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 2012ல் அரோரா கூகிள் நிறுவனத்தில் இணையும் போது அவரது சம்பளமானது 51 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |