IIT படிப்பை பாதியில் கைவிட்டு... ஐந்தே மாதத்தில் ரூ 286 கோடி சம்பாதித்து அசத்திய நபர்
இந்தியாவில் IIT படிப்பு என்பது பல மாணவர்களுக்கும் கனவாக இருக்க, வாய்ப்பு அமைந்தும் பாதியில் கைவிட்டு வெளியேறி வெற்றி கண்டவர்களும் இருக்கிறார்கள்.
சொந்தமாக நிறுவனம்
அதில் ஒருவர் ராகுல் ராய். மும்பை IIT-ல் படிக்கும் வாய்ப்பினைப் பெற்ற ராகுல் ராய், பொறியியல் பட்டம் பெறாமல் பாதியிலேயே வெளியேறினார். 2015ல் IIT படிப்பை கைவிட்டவர், அமெரிக்காவுக்கு சென்று பிரபலமான கல்வி நிறுவனத்தில் இருந்து வணிகம் பயின்று 2019ல் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து Morgan Stanley நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 2020ல் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக நிறுவனம் ஒன்றை உருவாக்கும் முடிவுடன் இந்தியா திரும்பினார்.
பரவலாக்கப்பட்ட நிதிக் கொள்கையில் ஆர்வம் ராய் கொண்டிருந்தார். இதனால் விரிவான ஆய்வுக்கு பின்னர் 2021 ஜனவரி மாதம் தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து Gamma Point Capital என்ற கிரிப்டோ ஹெட்ஜ் நிதி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
இவர்களின் நிதியானது டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு BlockTower Capital என்ற நிறுவனம் பெருந்தொகைக்கு இவர்களின் நிறுவனத்தை வாங்க முன்வந்தது.
அதாவது 2021 மே மாதம் ரூ 286 கோடி தொகைக்கு இவர்களின் நிறுவனம் கைமாறியது. தொடங்கி ஐந்தே மாதத்தில் நிறுவனத்தை விற்பது என்பது கடினமான முடிவு என்றாலும், BlockTower Capital முன்வைத்த தொகையை சம்பாதிக்க பல ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்ட ராகுல் ராய் மற்றும் அவரது நண்பர்கள் தங்கள் நிறுவனத்தை விற்க ஒப்புக்கொண்டனர்.
தற்போது BlockTower Capital நிறுவனத்தில் முதன்மை பொறுப்பு ஒன்றில் ராகுல் ராய் பணியாற்றுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |