ஆண்டுக்கு ரூ.84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு சலவை தொழிலில் ஈடுபடும் நபர்
பீகாரைச் சேர்ந்த IIT பட்டதாரி ஒருவர், ஆண்டுக்கு ரூ 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு, தற்போது தமது மனைவியுடன் இணைந்து ரூ 170 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
குடும்பம் கடும் போராட்டம்
பீகாரைச் சேர்ந்தவர் அனுரப் சின்ஹா. 8வது வகுப்பில் இருந்தே IIT பட்டப்படிப்புக்கு தயாராகி வந்தவர். 12ம் வகுப்பு முடித்ததும் மும்பை IIT-ல் அவருக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஆனால் அவருக்கான கல்லூரி கட்டணம் செலுத்துவதில் அவரது குடும்பம் கடும் போராட்டத்தை எதிர்கொண்டது. ஒருவழியாக பட்டப்படிப்பை முடித்தவர், வெளிநாட்டில் வேலை தேடி சென்றார்.
அத்துடன் 2015ல் திருமணமும் செய்து கொண்டார். அதே ஆண்டில் ஹொட்டல் நிர்வாகத்துறையில் நுழைந்த அனுரப், பல எண்ணிக்கையிலான ஹொட்டல்களை நிர்வகிக்கத் தொடங்கினார்.
அப்போது தான் எவரும் கண்டுகொள்ளாத புதிய வாய்ப்பு ஒன்று அவர் பார்வையில் பட்டது. இதனையடுத்து அனுரப் மற்றும் அவரது மனைவி குஞ்சன் சின்ஹா ஹொட்டல்களுக்கான சலவை தொழிலை முன்னெடுக்க முடிவு செய்தனர்.
நிறுவனத்தின் மதிப்பு ரூ 170 கோடி
அத்துடன் தரமான சேவையை வழங்கவும் உறுதி அளித்தனர். ஆண்டுக்கு ரூ 84 லட்சம் சம்பளம் வாங்கி வந்த அனுரப், 2016ல் அந்த வேலையை விட்டுவிட்டு, ரூ 20 லட்சம் முதலீட்டில் 2017 ஜனவரி மாதம் UClean என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு என்பது ரூ 170 கோடி. இந்தியா முழுக்க 104 நகரங்களில் 350 UClean கடைகளை திறந்துள்ளனர். மட்டுமின்றி, வங்கதேசம், நேபாளத்திலும் கடைகளை திறந்துள்ள நிலையில்,
தற்போது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |