IIT பட்டதாரி எடுத்த ஒற்றை முடிவு... அவர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 6,000 கோடி
பிரான்சில் மென்பொருள் பொறியாளர் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பியவர் உருவாக்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 6,000 கோடி.
வெற்றிகரமான நிறுவனம்
உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நண்பர் ஒருவரிடன் இணைந்து நடத்தி வருகிறார் ரஜ்னிஷ் குமார்.
Ixigo நிறுவனத்தின் இணை நிறுவனரான ரஜ்னிஷ் குமார் என்பவரே அந்த IIT பட்டதாரி. 2007ல் அலோகே பாஜ்பாய் என்பவருடன் இணைந்து Ixigo என்ற நிறுவனத்தை ரஜ்னிஷ் குமார் நிறுவியுள்ளார்.
2001ல் கான்பூர் IIT-ல் பட்டம் பெற்ற ரஜ்னிஷ் குமார் ETH Zurich நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். 2003ல் பிரான்ஸ் நிறுவனமான Amadeus SAS-ல் மென்பொறியாளராக இணைந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த வேலையை விட்டுவிட்டு, 2007ல் Ixigo என்ற நிறுவனத்தை ரஜ்னிஷ் குமார் நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் ஊடாக பயனர்கள் விமானம், ரயில், ஹொட்டல் உட்பட அனைத்தும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
சந்தை மதிப்பு ரூ 6,275.87 கோடி
மட்டுமின்றி, Ixigo செயலியானது மக்கள் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் உலகின் முதல் 10 செயலிகளில் ஒன்றாக அடிக்கடி பட்டியலிடப்பட்டும் வந்துள்ளது.
Ixigo நிறுவனத்தின் தாய் நிறுவனமான Le Travenues Technology நிறுவனத்தின் பங்குகள் ஜூன் 18ம் திகதி 78 சதவிகித விலை உயர்வை சந்தித்து, ரூ 93ல் நிறைவடைந்துள்ளது.
இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ 6,275.87 கோடி என அதிகரித்தது. ரஜ்னிஷ் குமார் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து தான் Ixigo நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் Ixigo நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் திட்டமும் இருப்பதால், எதிர்காலத்தில் மிகப்பெரிய நிறுவனமாக உருவாகும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |