IIT பட்டதாரிகளுக்கு விரைவில் பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு!
IIT பட்டதாரிகள் விரைவில் பிரித்தானியாவின் High Potential Individual விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதி பெறவுள்ளனர்.
வேலை வாய்ப்பு (job offer) இல்லாமல், திறமை வாய்ந்த பட்டதாரிகள் High Potential Individual (HPI) விசா மூலம் பிரித்தானியாவில் வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
AI மேம்பாட்டுக்காக பிரித்தானியாவின் புதிய திட்டம்
AI Opportunities Action Plan எனப்படும் புதிய அறிக்கையில் Matt Clifford என்பவர் பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளை மறுசீரமைத்து சிறந்த AI பட்டதாரிகளை ஈர்ப்பது முக்கியம் என பரிந்துரைத்துள்ளார்.
இந்த திட்டம் ஜனவரி 13, 2025 அன்று வெளியிடப்பட்டது.
பிரித்தானியாவின் தற்போதைய HPI விசா
- உலகின் 40-க்கும் மேற்பட்ட முன்னணி பல்கலைக்கழக பட்டதாரிகள் இந்த HPI விசாவிற்கு தகுதி பெறுகிறார்கள்.
- இந்த பட்டியலில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனாவின் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை.
- HPI விசா பெறுவதற்கு, கடைசி 5 ஆண்டுகளில் ஒரு தகுதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
- பொதுவாக 2 வருடங்கள் மற்றும் PhD பட்டதாரிகளுக்கு 3 வருடங்கள் செல்லுபடியாகும்.
- இந்த விசா நீட்டிக்க முடியாது, ஆனால் Skilled Worker விசாவிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
IIT பட்டதாரிகளுக்கு HPI விசா வழங்கும் திட்டம்
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IITs) போன்ற உயர் AI கல்வி நிறுவனங்களை HPI விசா பட்டியலில் சேர்ப்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- IIT பட்டதாரிகள் UK-யில் இருந்து AI தொடர்பான தொழில்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- பிரித்தானியாவில் AI நிபுணர்கள் பற்றாக்குறை உள்ளது. IIT பட்டதாரிகள் இந்த குறையை நிரப்ப உதவலாம்.
பிரித்தானியாவின் AI வளர்ச்சிக்கு புதிய முயற்சிகள்
- UK Sovereign AI என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி AI முன்னேற்றங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- Google DeepMind, ARM, Wayve போன்ற AI நிறுவனங்களைக் கொண்டு பிரித்தானியாவை AI முன்னோடியாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
- அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிடம் பிரித்தானியா பின் தங்காதிருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி IIT பட்டதாரிகள் பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான புதிய வாய்ப்பு உருவாக உள்ளதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AI Opportunities Action Plan UK, IIT graduates soon be eligible for High Potential Individual visa for AI jobs in UK, UK AI Jobs, UK Jobs for IIT graduates