படித்த கல்லூரிக்கு ரூ.100 கோடி நன்கொடை - இந்தியாவிலே முதல் முறை
முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களுடன் மீண்டும் சந்திப்பு நிகழ்த்தி, தங்களால் இயன்ற உதவிகளை பள்ளி அல்லது கல்லூரி வளர்ச்சிக்கு வழங்குவது உண்டு.
ரூ.100 கோடி நன்கொடை
ஐஐடி கான்பூரில், 2000 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் 2,000 பேர் இணைந்து, 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மீண்டும் ஐஐடி கான்பூரில் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, ஐஐடி கான்பூருக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளனர்.
"கிரேஸ் ஆஃப் தி மில்லினியம்" என்றும் குறிப்பிடப்படும் 2000 ஆம் ஆண்டு வகுப்பு மாணவர்கள் வழங்கும் இந்த நிதியை, மில்லினியம் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சொசைட்டி(MSTAS) நிறுவுவதற்குப் பயன்படுத்த வேண்டும் என முன்மொழிந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐஐடி கான்பூரின் இயக்குனர் மணிந்திர அகர்வால், "இந்த உறுதிமொழி கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பின்,வலிமையான உறுதிப்படுத்தலாக உள்ளது" என விவரித்தார்.
During their Silver Jubilee Reunion, the Class of 2000 announced a remarkable, ₹100 Crore pledge to their alma mater—marking the highest-ever contribution by a single graduating batch across academic institutions in India.
— IIT Kanpur (@IITKanpur) December 28, 2025
This historic commitment reflects the batch’s enduring… pic.twitter.com/DhkGyXve00
இதில், இன்மொபியின் நிறுவனர் திவாரி நவீன் திவாரி மட்டும் ரூ.30 கோடி வழங்க உள்ளார். இன்மொபி, 2011 ஆம் ஆண்டில் பில்லியன் டொலர் மதிப்பீட்டை எட்டிய இந்தியாவின் முதல் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் ஆகும்.

மேலும், NoBroker நிறுவனர் அமித் குமார் அகர்வால், Yulu நிறுவனர் அமித் குப்தா மற்றும் Knowlarity, Card91 ஆகியவற்றின் நிறுவனர்கள் இந்த நன்கொடையில் தங்கள் பங்களிப்பை வழங்க உள்ளனர்.
இந்தியாவில், ஒரு கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இணைந்து, ஒரே நேரத்தில் அதிக நன்கொடை வழங்கியது இதுவே முதல் முறையாகும்.

கடந்த டிசம்பர் 21 அன்று, 1986 ஆம் ஆண்டு மாணவர் குழு, மாணவர் வாழ்க்கை, மனநலம் மற்றும் சமூக வசதிகளுக்காக ரூ.11 கோடி நன்கொடை அளித்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், முன்னாள் மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ரூ.265.24 கோடியை கான்பூர் ஐஐடிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |