ஐ.ஐ.டி மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் என்ன தொடர்பு?

Germany
By Balamanuvelan May 12, 2021 11:27 AM GMT
Report

ஐ.ஐ.டி மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் என்ன தொடர்பு? சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று, மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் இடையிலான தொடர்பை தெரியப்படுத்தியுள்ளது.

1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜேர்மனி மற்றொரு குழப்பத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பில் இருந்தது. அடுத்த ஒன்றரை தசாப்தத்தில், அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளால் பெர்லின் சுவர் உருவானது.

அந்த சுவர், ஜேர்மனியை கிழக்கு ஜெர்மனி என்றும் மேற்கு ஜெர்மனி என்றும் இரண்டாகப் பிரித்தது. இந்த இரண்டு ஜேர்மனிகளுக்கும் இடையிலான பனிப்போரின் போது இந்தியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளிலிருந்து வெளிவந்த மிகப்பெரிய கல்வித் திட்டங்களில் ஒன்று, 1959ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் நிறுவப்பட்டதாகும்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் என்ன தொடர்பு? | Iit Madras Connection With Cold War

1946 ஆம் ஆண்டில் சர்க்கார் கமிட்டி அமெரிக்காவின் புகழ்பெற்ற Massachusetts Institute of Technology நிறுவன வரிசையில், குறைந்தபட்சம் நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களை அமைக்க இந்தியாவுக்கு பரிந்துரைத்தது, ஆனால், சுதந்திரத்திற்கு பின்புதான் ஐ.ஐ.டி. உருவானது.

மேற்கு ஜேர்மனி மெட்ராஸ் ஐ.ஐ.டிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு சற்று முன்பு, சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஐ.ஐ.டி பம்பாய் 1958 இல் நிறுவப்பட்டது. ஜவஹர்லால் நேரு பனிப்போரின் போது அணிசேரா இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதால் கிழக்கு ஜேர்மனியை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இந்தியா ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று மேற்கு ஜேர்மனி விரும்பியது.

ஆரம்பத்தில் அதன் ஆசை நிறைவேறியது என்றும் கூறலாம். மெட்ராஸ் ஐ.ஐ.டி அமைக்கப்படும் இடத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவரான ஜேர்மன் பேராசிரியரான Roland Wittje என்பவர் கூறும்போது, முதலில் டில்லிக்கு அருகில் எங்காவதுதான் ஐ.ஐ.டி அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது என்கிறார், அத்துடன், அதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் என்ன தொடர்பு? | Iit Madras Connection With Cold War

ஆனால் பனிப்போருக்குப் பின்னர் இந்த நிறுவனம் மீது அரசியல் செல்வாக்கு ஏதும் இல்லை என்று கூறுகிறார் Roland Wittje. ஆரம்பத்தில், மேற்கு ஜேர்மனி நீண்ட கால கண்ணோட்டத்தில் சிந்திக்கவில்லை. அவர்கள் மெட்ராஸ் ஐ.ஐ.டியை ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மட்டுமே பார்த்தார்கள்.

ஆனால் 1970களின்போது, மேற்கு ஜேர்மனி ஒரு தொழில்நுட்ப அறிவியல் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்க விரும்பியது. ஆகவே, மற்ற ஐ.ஐ.டிகளிலிருந்து வேறுபட்ட ஒரு திட்டத்துடன் மெட்ராஸ் ஐ.ஐ.டியை அது உருவாக்கியது என்கிறார் அவர்.

அன்று இந்தியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் இருந்த உறவின் பலனை இன்றும் ஏராளம் மாணவர்கள் அனுபவிக்கிறார்கள் என்கிறார் Roland Wittje.  

ஐ.ஐ.டி மெட்ராஸ் நிறுவனத்துக்கும் ஜேர்மனியில் நடைபெற்ற பனிப்போருக்கும் என்ன தொடர்பு? | Iit Madras Connection With Cold War

Photo Credits - IIT M Heritage Centre

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US