BCA, BSC படித்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகளுடன் இலவச வேலைவாய்ப்பு
IIT சென்னை மற்றும் IITM பிரவர்தக் இணைந்து BCA,BSC படித்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர்/ கோயம்புத்தூர் பகுதிகளை சேர்ந்த BCA,BSC படித்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகள் வழங்க போவதாக கூறப்படுகின்றது.
இதற்கான முன்பதிவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை உள்ளதாகவும், 3 மாதக்காலம் இந்த பயிற்சிகள் தொடர்ந்து இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.
நோக்கம்
தொழில் துறையில் மேலோங்கி மாணவர்கள் செயற்பட வேண்டும் என்பதனை கருபொருளாக கொண்டு ஐஐடி சென்னை ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் நிறுவனம் இந்த சேவையை வழங்க முன் வந்துள்ளது.
இந்த சேவையின் மூலம் தகவல் தொழில்நுட்பம் / உள் கட்டமைப்பு மற்றும் தகவல் உதவி மையம் போன்றவற்றுக்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்த திட்டமானது லைட்ஸ்ரோம் (https://lightstorm.net/) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.
பாடங்கள் பற்றி விவரங்கள்
- நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ் (Networking Essentials)
- கிளவுட் ஃபண்டமெண்டல்ஸ் (Cloud Fundamentals)
- டிக்கெட்டிங் கருவிகள்
- லினக்ஸ் (Linux)
- வின்டோஸ் அடிப்படைகள் (Windows Basics)
- ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள் (Storage and Backup Basics)
- தனித்திறன்கள்
விண்ணப்பம் பெறும் வழிமுறை
இலவச பயிற்சித் திட்டம் ஜூலை 2024 முதல் வாரம் துவக்கம் ஜூன் 12 2024 வரை இடம்பெறவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் (https://forms.gle/7RhAKgrGRgwr17zd6) என்ற இணையதள முகவரியினுள் பதிவு செய்யுங்கள்.
மேலதிக தகவல்
1. பயிற்சி இலவசமாக சரியாக 3 மாதங்கள் வரை இடம்பெறும்.
2. மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை இங்கு கொடுக்கப்படாது.
3. வகுப்பு அடிப்படையிலான பயிற்சித் திட்டமாகவே அமையும்.
4. கடந்த 2023, 2024 ஆண்டுகளில் பிஎஸ்சி தேர்ச்சி (தகுதியான பாடத்திட்டம்- கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரித் தொழில்நுட்பம்), பிசிஏ மாணவர்கள், குறைந்தபட்சம் 60% சராசரி மதிப்பெண்கள் அவசியம்.
5. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப உதவிப் பிரிவில் சேருவதற்கு மாணவர்களைத் திறமைப்படுத்துதல்.
6. மாணவர்களின் இருப்பைத் தெரிவிக்கும் வகையில் மாதிரி நேர்காணல்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்பு உதவி வழங்கப்படும்.
7. வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
முக்கிய குறிப்பு
தற்காலிக தொடக்க நாள்- ஜூன்- 2024
தொடக்கம்- ஜூலை - 2024, நிறைவு- செப்டம்பர் - 2024
ப்ரவர்த்தக் இணையதள முகவரி- https://iitmpravartak.org.in/