விடுதியில் இறந்துகிடந்த IIT மாணவர்! சிக்கிய குறிப்பு..அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்
இந்திய மாநிலம் அசாமில் IIT மாணவர் ஒருவர் விடுதியில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது அறையில் இறந்து கிடந்த மாணவர்
பீகாரைச் சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர், அசாமில் உள்ள IIT கவுகாத்தியில் BTech முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.
விடுதியில் தங்கியிருந்த குறித்த மாணவர் புதன்கிழமை இரவு தனது அறையில் இறந்து கிடந்துள்ளார். அவருடன் தங்கியிருந்த மாணவர் அங்கு இல்லாத நிலையில், விடுதி பாதுகாவலர்கள் மாணவர் இறந்து கிடந்ததை அறிந்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மாணவரின் உடல் மீட்கப்பட்டதுடன், அவரது அறையில் இருந்து குறிப்பும் ஒன்றும் கிடைத்தது.
பிரேத பரிசோதனை
அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிய பொலிஸார், குறித்த மாணவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ''நாங்கள் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்'' என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மகனின் இறப்பு செய்தி அறிந்த மாணவரின் பெற்றோர், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |