73 முறை நிராகரிப்பு... பின்னர் தொடங்கிய 2 நிறுவனங்களின் மதிப்பு ரூ 52,000 கோடி: இவரின் சொத்துமதிப்பு
டெல்லி ஐஐடியில் B-Tech பட்டதாரியான Ruchi Kalra எதிர்கொண்ட சவால்களை அனைத்தையும் மொத்தமாக உடைத்து சாதனை புரிந்தவர்.
தற்போதைய சந்தை மதிப்பு ரூ 52,000 கோடி
B-Tech மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான Ruchi Kalra சுமார் 8 ஆண்டுகள் McKinsey நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கணவருடன் சேர்ந்து உருவாக்கிய இரு நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 52,000 கோடி என்றே கூறப்படுகிறது.
2015ல் ருச்சி கல்ரா மற்றும் அவரது கணவர் Asish Mohapatra ஆகியோர் இணைந்து OfBusiness என்ற நிறுவனத்தை நிறுவினர். மூலப்பொருட்கள், தொழில்துறை பொருட்கள் போன்றவற்றை இந்த நிறுவனமூடாக விற்பனை செய்து வந்தனர்.
மிக குறுகிய காலத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ 44,000 கோடிக்கு உயர்ந்தது. தொடர்ந்து 2017ல் Oxyzo என்ற நிறுவனத்தை ருச்சி கல்ரா தொடங்கியுள்ளார். அதாவது தங்களின் OfBusiness என்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதே Oxyzo என்ற நிறுவனத்தின் நோக்கம்.
சுமார் 200 மில்லியன் டொலர் முதலீடு ஈர்த்த இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 8,200 கோடி என்றே கூறப்படுகிறது. Oxyzo நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ருச்சி கல்ரா செயல்பட்டு வருகிறார்.
நம்பிக்கையை கைவிடாமல்
2021 நிதியாண்டில் Oxyzo என்ற நிறுவனத்தின் வருவாய் ரூ 197.53 கோடி எனவும் 2022 நிதியாண்டில் வருவாய் ரூ 312.97 கோடியாகவும் அதிகரித்தது. 2021-22ல் இவர்களின் வருவாய் என்பது ரூ 60.34 கோடி என்றும் அதற்கு முந்தைய ஆண்டு வருவாய் என்பது 39.94 கோடி எனவும் இருந்துள்ளது.
ஆனால் OfBusiness நிறுவனத்தினூடாக இவர்களுக்கு கிடைத்த வருவாய் என்பது, அரசாங்க வரிகள் அனைத்தும் செலுத்திய பின்னர் ரூ 125.63 கோடி என்றே கூறப்படுகிறது.
2016ல் ஒருமுறை ருச்சி கல்ரா தெரிவிக்கையில், தமது தொழில் தொடர்பான திட்டத்தை 73 முதலீட்டாளர்கள் நிராகரித்ததாகவும், இருப்பினும் நம்பிக்கையை கைவிடாமல் சாதித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டு நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ 52,000 கோடி. கடந்த 2022ல் ருச்சி கல்ராவின் சொத்துமதிப்பு ரூ 2,600 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |