ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இலங்கைத் தமிழ்ப்படம் அந்தோணி
ilayaraaja musical anthony in sri lanka oscars race: இளையராஜா இசையமைத்த முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமான அந்தோணி, இலங்கையின் ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவுக்கு படக்குழுவால் அனுப்பப்பட்டுள்ளது.
ஆஸ்கர் போட்டியில் இளையராஜாவின் அந்தோணி
1976 ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட படங்களில், சுமார் 7,000 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த மார்ச் 13 ஆம் திகதி வெளியான அந்தோணி திரைப்படம், இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என கூறப்படுகிறது.

ஓசை பிலிம்ஸ் சார்பில் கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் தயாரித்துள்ள இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர்.
கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த ‘அந்தோனி’ திரைப்படம் இலங்கை திரைப்படக் கூட்டுஸ்தாபனத்திற்கு 2027 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவுக்கு படக்குழு சார்பில் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
இதே போல், இளையராஜா இசையமைப்பில், சந்தோஷ் டாவகார் இயக்கிய மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ 2027 ஆஸ்கருக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், ஆஸ்கருக்கான போட்டியில் இளையராஜாவின் 2 படங்கள் இணைந்துள்ளது. முன்னதாக இளையராஜா இசையில் உருவான தேவர் மகன், ஹே ராம் போன்ற படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது.