"தென்றல் வந்து தீண்டும் போது.." - இலங்கையில் இளையராஜா
இலங்கையை சென்றடைந்த இசைஞானி இளையராஜா, என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையையும் விட்டு வைக்காத இளையராஜா
இலங்கையில் வருகிற 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறும் 'இளையராஜா Live in concert' கொழும்பிற்கு நேற்று மாலை 5.15 மணியளவில் சென்றடைந்தள்ளார்.
இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
அதன்போது ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எப்போது வந்தாலும் நான் இசையோடு தான் வருவேன். இலங்கையில் நீங்கள் எங்கு இருந்தாலும் இசை இல்லாமல் உங்களால் இருக்க முடியாது.
அதும் என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது. இலங்கை தமிழர்களில் என் ரசிகர்கள் இல்லாமல் யாராவது இருக்கிறார்களா?
எல்லோரும் துன்ப துயரங்களைக் கடந்து வந்தவர்கள் தானே? யாரை பாதிக்கிற அந்த மனநிலையில் இருந்தாலும் கூட என்னுடைய இசை உங்களை ஆறுதல்ப்படுத்துகிறது என்றால் அதுவே எனக்கு பெரிய சந்தோசம். கடவுள் கொடுத்த வரமாக நான் நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், சென்னை தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்காதது வருத்தம் என தெரிவித்திருந்தார்.
உலகிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. இந்த காரியத்தை முடித்த நமது பிரதமர் மோடிக்கு இந்த ஆழியாகப் புகழ் சென்று சேரும். இந்தியாவில் அதிகமாக இருப்பது மன்னர்கள் கட்டிய கோயில் தான். ஆனால் ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கான கோயில் கட்டிக்கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என தெரிவித்துள்ளார்.
அயோத்தில் இருக்க வேண்டிய நான் இன்று உங்கள் முன்னிலையில் இருப்பது ஒரு வகையில் சந்தோசத்தை தருகிறது என கூறியுள்ளார்.
மேலும் இவர் இலங்கையில் நடத்தவுள்ள இசை நிகழ்ச்சியில் பாடகர் மனோ, பாடகர் மது பாக்கிருஷ்ணன், பாடகி விபாவரி, பாடகி ஸ்வேதா மோகன், பாடகி ஸ்ரீஷா விஜயசேகர், பாடகி அனிதா கார்த்திகேயன், பாடகி சுர்முகி ராமன், பாடகி பிரியா ஹிமேஷ் மற்றும் பாடகர் S. P.சரண் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான டிஜிட்டல் ஊடக அனுசரனையை லங்காசிறி, தமிழ்வின் மற்றும் சினிஉலகம் வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |