உலகையே மறக்கச்செய்பவர் இசைஞானி இளையராஜா.., அவரின் சொத்துமதிப்பு எவ்வளவு?
தமிழ் சினிமா இசையின் ராஜாவாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா.
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 7000 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இளையராஜா ஐந்து தேசிய திரைப்பட விருதுகளையும், மூன்று சிறந்த இசை இயக்குனருக்காகவும், இரண்டு சிறந்த பின்னணி இசைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதினை பெற்றார்.
மேலும், 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் ஆகியவற்றால் அவர் கௌரவிக்கப்பட்டார்.
அந்த காலம் தொடங்கி தற்போது வரை தனது வசீகரிக்கும் இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.
1968-ல் சென்னையில் மாஸ்டர் தன்ராஜிடம் இசைப் படிப்பைத் தொடர்ந்தார். டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாசிக்கல் கிடாரில் தங்கப் பதக்கம் பெற்றார்.
இந்நிலையில், உலகத்தையே தனது பாடல்களால் மறக்கச்செய்யும் இசைஞானி இளையராஜாவின் முழு சொத்துமதிப்பு குறித்து பார்க்கலாம்.
திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களுக்கான இசையமைப்புகள் மூலம் இசை உலகில் பாராட்டையும் நிதி வெற்றியையும் பெற்றவர்.
அந்தவகையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகர மதிப்பு சுமார் 24 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |