நடிகை வனிதா விஜயகுமார் நடித்த படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு
நடிகை வனிதா விஜயகுமார் நடித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
வனிதா நடித்த படம்
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், தற்போது வனிதா இயக்கி அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ்.
வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்த இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இணைந்து நடித்திருக்கிறார்.
இளையராஜா வழக்கு
இந்நிலையில், வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
வனிதா நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தில், தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைப்பில் வெளியான "ராத்திரி சிவராத்திரி" பாடலை வனிதா இயக்கியுள்ள படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |