இளையராஜாவின் மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்: உடல் இந்தியாவிற்கு வருவது எப்போது?
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பவதாரிணி காலமானார்
இந்திய திரையுலகின் இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47) வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 மாதங்களாக பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படும் நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று மாலை 5.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இளையராஜாவின் குடும்பத்தினருக்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?
பிரபல பின்னணி பாடகரான பவதாரிணி கடந்த 2000ம் ஆண்டில் பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கியிருந்தார்.
மேலும் பிரண்ட்ஸ், தாமிரபரணி, காதலுக்கு மரியாதை, மங்காத்தா, கோவா, அனேகன் ஆகிய பல படங்களில் பாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ilaiyaraaja, bhavatharini, Singer bhavatharini, Tamil, Tamil cinema