சர்ச்சைகளுக்கு இடையில் கேள்விகளை எழுப்பும் இளையராஜாவின் பதிவு!
இளையராஜா குறித்து இணையத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், பாடல் ஒன்றை பாடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், பிரதமர் மோடியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்று இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு பேசியது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளானது.
மேலும், அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார். இதனால் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், தனது பக்கத்தில் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலில் வரிகளில் மாற்றம் செய்து இளையராஜா பதிவிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு இடையில் அவரது இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) April 21, 2022