இளநரை படாய்படுத்துதா...? கவலை வேண்டாம்- இதை சாப்பிட்டால் போதும்
இன்றை காலத்தில் 30 வயதுக்கு முன்பாகவே எல்லோருக்கும் இளநரை வந்து விடுகிறது. நாம் சாரியாக ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால்தான் இளம் வயதிலேயே இளநரை வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு அழகே அவருடைய கூந்தல்தான். ஒன்றிரண்டு இளநரை இருந்தால் அது பெரிதாக தெரியாது. ஆனால், அதிகப்படியான இளநரை ஒருவரக்கு இளம் வயதிலேயே இருந்தால் அவர்களை வயதானவர்கள் போல் காட்டிவிடும். இந்த இளநரைகள் மரபு ரீதியில் கூட ஒருவருக்கு வரலாம்.
மனஅழுத்தம் அதிகமாக இருந்தாலோ அல்லது உணவில் மாற்றம் இருந்தாலோ இளநரை வருவதற்காக காரணமாக சொல்லப்படுகிறது.
கவலை வேண்டாம்.. எப்படி இளநரையை கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம் -
கீரைகள்
கீரைகளில் நிறைய ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. பாலக்கீரை, வெந்தயக் கீரை, தானியங்கள், கொண்டக்கடலை, பீன்ஸ் மற்றும் பழவகைகளை தினசரி சாப்பிட்டு வந்தால் இளநரையை அதிகம் வளராமல் தடுக்க முடியும்.
விட்டமின்
ஒருவருக்கு கூந்தல் மிக மிக அவசியம். நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதை கூந்தலை கொண்டு கவனித்துவிட முடியும். அப்படிப்பட்ட கூந்தலில் இளநரை வராமல் தடுக்க, முட்டையின் மஞ்சள் கரு, பால் உற்பத்தி பொருட்கள், விட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.
விதைகள்
இளநரையை கட்டுப்படுத்த, பரங்கி விதைகள், சூரியகாந்தி விதைகள், தர்பூசணி, பாதாம், உளுந்து, எள்ளு போன்றவற்றில் ஜிங்க் சக்தி அதிகமாக இருக்கிறது. இதை தினசரி நீங்கள் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் உங்களுடைய இளநரை கட்டுப்படும்.
நட்ஸ்
பாதாம், மீன்கள், முந்திரி, கோதுமை போன்றவற்றில் காப்பர் சத்து அதிகமாக உள்ளது. இவற்றை நீங்கள் தினமும் சாப்பிட்டு வர உங்கள் உடல் ஆரோக்கியமடைவதுடன், இளநரையை வளராமல் தடுத்து விடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |