உங்களின் பெருமையை பறைசாற்ற லண்டன் செல்கிறேன் - இளையராஜா பெருமிதம்
தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்த இளையராஜா லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.
இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, வரும் மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார்.
இதனையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக லண்டனுக்கு புறப்பட்டு சென்ற இளையராஜா, முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
உங்களுடைய பெருமை
அப்போது பேசிய அவர், "புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக இசை கலைஞர்களும் உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா லண்டன் அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு மகிழ இந்த இசையை வெளியிட உள்ளோம்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. இது என்னுடைய பெருமையில்லை. நாட்டினுடைய பெருமை. இந்தியாவின் பெருமை.
'incredible India' போல நான் 'incredible ilayaraja'. என்னைப்போல ஒருவர் இதுக்குமேல யாரும் வரப்போறதும் இல்லை, வந்ததும் இல்லை. நீங்களெல்லாம் சேர்ந்துதான் நான். உங்களுடைய பெருமையைதான் பறைசாற்ற லண்டன் செல்கிறேன்" என நெகிழ்ச்சியாக பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |