பவதாரிணியின் மறைவால் கதறி அழும் நடிகர் வடிவேலு; வைரலாகும் குரல் பதிவு
இளையராஜாவின் மகளான பவதாரிணியின் மறைவானல் நடிகர் வடிவேலு கதறி அழும் குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.
கதறும் நடிகர் வடிவேலு
பிரபல பின்னணி பாடகரான பவதாரிணி புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இலங்கை வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
பல பிரபலங்களும் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், தற்போது நடிகர் வடிவேலு கதறி அழும் குரல் பதிவென்று வெளியாகி இருகின்றது.
அந்த குரல் பதிவில், " 'மாரிசன்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் தான் இச்செய்தியை அறிந்தேன். இதை கேட்டவுடனே அதிர்ச்சியாகிவிட்டேன்.
7 வயசு பொண்ணு இவ்வளவு சீக்கிரமா கடவுள் கிட்ட போயிடுச்சே. அவளுடைய குரல் குயில் குரல் போனது. அது ஒரு தெய்வக் குழந்தை. உலகத் தமிழர்கள் அனைவருமே இச்செய்திக் கேட்டு நொறுங்கி இருப்பார்கள்.
தைப்பூச நாளில் இவர் உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.
அண்ணன் இளையராஜாவின் மனம் தற்போது தைரியமாக இருக்க வேண்டும். என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதுக்கு மேல என்னால பேச முடியவில்லை" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |