தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ள இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா,"தேசிய பாதுகாப்பு நிதிக்கு" நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இளையராஜா நன்கொடை
பஹல்காம் துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, பல இந்திய எல்லையோர மாநிலங்கள் மீது ஏவுகணைகளை ஏவி இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இருப்பினும், அந்த முயற்சிகளை இந்திய ஆயுதப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா,"தேசிய பாதுகாப்பு நிதிக்கு" நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்ட எக்ஸ் பக்கத்தில், "என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை வேலியன்ட் நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, "தேசிய பாதுகாப்பு நிதிக்கு" நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த நன்கொடை என் "வேலியன்ட்" இசைக்கு மட்டும் அல்ல – நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் காணும் தியாகத்திற்கும் உரிய மரியாதை" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |