ஐரோப்பாவை இசையில் நனைத்த இளையராஜா! லண்டனில் அடுத்த பிரம்மாண்ட இசை விழா
Gaana vin four seasons group UK குழுமம் நடத்திய 50 years of Ilaiyaraja கடந்த சில வாரங்களில் ஐரோப்பாவின் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது இன்னிசைக் குரல் மற்றும் பாடல்களை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ரசிகப்பெருமக்கள் உலகெங்கும் உள்ளார்கள்.

இந்நிலையில் Gaana vin four seasons group UK நடத்திய ஐரோப்பிய இசை சுற்று பயணத்திலே டப்ளின் ஸ்விஸ் சூரிச் மற்றும் ஜேர்மனி எஸென் ஆகிய நாடுகளின் இசைநிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று ரசிகர்களின் வரவேற்பை அதீதமாகப் பெற்றுள்ளது.
இசைஞானி இளையராஜா மற்றும் அவரது குழுவினர் மிகவும் உத்வேகமாக நிகழ்ச்சியினை கொண்டு சென்றனர்.
Gaana vin four seasons group UK குழுவினரின் ஆதரவோடு இசைஞானியின் ஐரோப்பிய இசை சுற்று பயண தொடர்ச்சியாக, அடுத்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள ovo Arena வில் ஜூலை 11ஆம் திகதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் டிக்கெட்களை பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்ட லிங்க் இணை கிளிக் செய்யவும் - https://Www.ovoarena.co.uk
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |