இளையராஜா, வைரமுத்து இசை சர்ச்சை.., எனக்கு சம்பந்தம் கிடையாது என நழுவிய குஷ்பு
சமீப காலமாக தொடரும் இளையராஜா- வைரமுத்து தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார்.
இளையராஜா- வைரமுத்து சர்ச்சை
திரைப்படங்களில் உள்ள பாடல்களின் இசை காப்புரிமை தனக்கு சொந்தம் என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதே போல, ரஜினிகாந்தின் 'கூலி' பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதே நேரத்தில் இளையராஜாவின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். அவர், "பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?" என்று பேசியுள்ளார். தற்போது இந்த விவகாரம் பெரிய விவாதமாகவே உருவெடுத்துள்ளது.
குஷ்பு பதில்
இந்நிலையில், நடிகை குஷ்பு ‘அரண்மனை4’ படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் வைரமுத்து- இளையராஜா பிரச்சனையைக் குறிப்பிட்டு இசை பெரிதா? மொழி பெரிதா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "திரைத்துறையில் எல்லா விடயங்களும் டீம் வொர்க்தான். இந்த விடயத்தை இயக்குநரும் இசையமைப்பாளரும்தான் பேச வேண்டும். நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் நான் பேசக் கூடாது" என்றார்.
மேலும், "வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் போர் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அவர்கள் தான் பேச வேண்டும். எனக்கும் இசைக்கும் சம்பந்தம் கிடையாது” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |