இனி இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு
இளையராஜாவின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைதளங்களில் வர்த்தக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் சினிமா இசையின் ராஜாவாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா.
இசையமைப்பாளராக அறிமுகமாகி 8000 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவரது தரப்பில் சோனி, ஸ்பாட்டிபை, உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் யுடியுப் சேனல்களுக்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அதில் "பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் போன்றவை தன்னுடைய புகைப்படம், பெயர் மற்றும் குரலை வியாபார ரீதியாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட தன்னுடைய போட்டோக்களை நீக்க வேண்டும்.

மேலும், அனுமதியின்றி தன்னுடைய புகைபடங்களை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம், பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |