லண்டனை மொத்தமாக உலுக்கிய சம்பவம்: அவருக்கு தெரிந்தவரே செய்திருக்க வாய்ப்பு
கிழக்கு லண்டனின் பிரிஸ்பேன் சாலையில் கார் ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு தெரிந்தவரே
அவருக்கு தெரிந்தவரே தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர். நவம்பர் 14ம் திகதி கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் 24 வயதான Harshita Brella என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நவம்பர் 13ம் திகதி ஹர்ஷிதாவின் நலன் குறித்த கவலையுடன் நார்தம்ப்டன்ஷைர் காவல்துறையை உறவினர்கள் தொடர்புகொண்ட நிலையிலேயே இந்த துயர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொதுமக்களுக்கு கோரிக்கை
நவம்பர் 15ம் திகதி முன்னெடுக்கப்பட்ட உடற்கூராய்வில், ஹர்ஷிதா கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்துள்ளனர். ஹர்ஷிதா மீது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த வாரத்தில் சந்தேகத்திற்குரிய எதையும் பார்த்தாலோ அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, சிறியதாக இருந்தாலும், எங்களைத் தொடர்பு கொள்ளவும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |