பிரான்சில் மக்களுக்கு பாதுகாப்பில்லாத மாகாணம் எது தெரியுமா? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்
பிரான்சில் இருக்கும் இல் து பிரான்சுவை பாதுகாப்பில்லாத பகுதியாக உணருவதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் பாதுகாப்பில்லாத மாகாணம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் இல் து பிரான்சுவை பாதுகாப்பில்லாத இடமாக உணர்வதாக பெரும்பாலான மக்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, பொது போக்குவரத்து, வீதிகளில் செல்லும் போது, வீடுகளில் இருக்கும் போது, தனித்து வாழும் போதும் இப்பகுதியை பாதுகாப்பில்லாததாக உணர்வதாக கூறியுள்ளனர்.
நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், 48 சதவீதம் மக்கள் இந்த காரணத்தை கூறியுள்ளனர். 38 சதவீதத்தினர் பொதுப் போக்குவரத்தையும், 7 சதவீதம் பேர் வீடுகளில் தனியாக தங்கும் போது என்றும் கூறியுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் இதே இல் து பிரான்சைய பாதுகாப்பில்லாத மாகாணமாக 47.7 சதவீதம் பேர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.