சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குமேல் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பது குற்றம் என்ற செய்தி உண்மையா?
சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குமேல் ஆண்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பது சட்ட விரோதம் என்பதுபோன்ற சில கதைகள் சமூக ஊடகங்களில் உலாவருகின்றன.
இந்த தகவல் உண்மையா?
இப்படி ஒரு விதி இருப்பதில் சிறிதளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஆனால், பிரச்சினை சிறுநீர் கழிப்பதில் என்று மட்டும் கூறிவிடமுடியாது. அதாவது, பிரச்சினை சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் சத்தத்தில்தானாம்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 7.00 மணி வரை தேசிய அமைதி நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் நாட்டில் எந்த சத்தத்துக்கும் அனுமதி கிடையாது.
ஆக, இரவு 10.00 மணிக்குமேல் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது குற்றம் அல்ல, அதனால் ஏற்படும் சத்தம், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதுதான் விடயம்.
Photo by Giorgio Trovato on Unsplash