பிரித்தானியாவில் ஏழு மாதங்களில் 4,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது
பிரித்தானியாவில், ஏழு மாதங்களில் சுமார் 4,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
ஏழு மாதங்களில் 4,000 புலம்பெயர்ந்தோர் கைது
பிரித்தானியா, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பிரித்தானியா உட்பட உலக நாடுகள் பலவற்றில், இன்று புலம்பெயர்தல் தேர்தலில் வெற்றி பெறுபவரைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகியுள்ளது.
தேர்தலில் நிற்கும் வேட்பாளர், எந்த வகையில் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவார் என்பதைப் பொறுத்தே அவருக்கு வாக்களிப்பதா இல்லையா என தீர்மானிக்கும் அளவுக்கு புலம்பெயர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது.
அத்துடன், ஆட்சிப்பொறுப்பில் இருப்போர் தங்கள் இருக்கையைத் தக்கவைத்துக்கொள்ள, மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறார்கள்.
அவ்வகையில், பிரித்தானியாவில் ஆளும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உணவு விற்பனையகங்கள், கார் வாஷ் செய்யும் இடங்கள் மற்றும் nail bar போன்ற 5,400க்கும் அதிகமான இடங்களில் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியுள்ளார்கள்.
ரெய்டுகளைத் தொடர்ந்து 3,930 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களில், பலர் சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்கள் அல்லது தங்கள் விசா காலாவதியான பின்னும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கிவிட்டவர்கள்.
இன்னொரு பக்கம், இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஒரு புலம்பெயர்ந்தோருக்கு 60,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், 1,090 அத்தகைய நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |