சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை சர்ச்சைக்குரிய நாடொன்றிற்கு நாடுகடத்த பிரித்தானியா திட்டம்
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை சர்ச்சைக்குரிய நாடொன்றிற்கு நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டுவருவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நாடொன்றிற்கு நாடுகடத்த திட்டம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அவ்வகையில், அடுத்ததாக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை சிரியா நாட்டுக்கு நாடுகடத்த திட்டமிட்டுவருவதாக ஷபானா தெரிவித்துள்ளார்.
சிரியாவில் பஷார் அல் அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இன்னமும் வன்முறை நீடித்துவருகிறது.
இருந்தபோதிலும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை சிரியா நாட்டுக்கு நாடுகடத்துவதில் உறுதியாக இருக்கிறார் ஷபானா.

விடயம் என்னவென்றால், மே மாதத்தில் பிரித்தானியாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்புகளில், தேர்தலில் நைஜல் ஃபராஜின் ரீஃபார்ம் யூகே கட்சி முன்னிலை வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், லேபர் கட்சி பெரும் இழப்புகளை சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆக, எதையாவது அதிரடியாக செய்து மக்கள் மனதில் இடம்பிடிக்க லேபர் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒரு பகுதிதான் இந்த அதிரடி புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்றும் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |