பிரித்தானியாவில் கொட்டப்பட்ட சட்டவிரோதக் கழிவு: 39 வயது நபர் கைது
ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் பகுதியில் சட்டவிரோத கழிவு கொட்டிய வழக்கில் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதக் கழிவு
ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் கிட்லிங்டனுக்கு அருகே கொட்டப்பட்ட சுமார் 40 அடி உயர கழிவுக் குவியலை அவசர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என சுற்றுச்சூழல் நிறுவனம் (EA) அவசர நிலையை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான டிரோன் காட்சிகளில், கொட்டப்பட்ட குப்பைகள் நூற்றுக்கணக்கான டன் எடை கொண்டதாகவும், பல லொறி லோடுகள் உள்ளடங்கிய கழிவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை கில்ட்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் நிறுவனம்(EA) மற்றும் தென்கிழக்கு பிராந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு பிறகு இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |