பொது நிகழ்ச்சிகளின்போது திடீரென கழிவறைக்கு செல்லவேண்டும் என்றால் ராஜ குடும்பத்தினர் என்ன செய்வார்கள்?
சிறுவயதிலேயே, தான் ஒரு இளவரசியாகவேண்டும் என கனவு கண்ட மேகன், அவரது ஆசைப்படியே இளவரசர் ஹரியை திருமணம் செய்தாலும், ராஜ குடும்பத்தின் கட்டுப்பாடுகளைத் தாங்க முடியாமல் தன் கணவரையும் இழுத்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டே ஓட்டம் பிடித்த கதையை உலகமே அறியும்.
ஆக, சினிமாக்களில் காட்டப்படுவதுபோல் உண்மையான ராஜ குடும்பங்கள் இருப்பது இல்லை. அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாகவேண்டும் என்ற மரபு உண்டு.
அவ்வகையில், ராஜ குடும்பத்தினர் பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Credit: AFP
கடுமையான உணவுப் பழக்கவழக்கங்கள்
ராஜகுடும்பத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்றால், அவர்கள் இறால் போன்ற கடல் உணவுகள், மற்றும் பச்சையான அல்லது குறைவான அளவே வேகவைக்கப்பட்ட இறைச்சி போன்ற உணவுகளை உண்ண அனுமதி கிடையாது. அதேபோல் குழாயில் வரும் தண்ணீரை அருந்தவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது. அந்த உணவுகள் அல்லது தண்ணீரில் இருக்கும் நோய்க்கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால்தான் இந்த கட்டுப்பாடு.
அதாவது, வயிறு சரியில்லை என ராஜ குடும்பத்தினர் விடுப்பு எடுக்க முடியாது!
இளவரசி கேட், தானே மதுபானத்தை கப்பில் பிடித்துக் குடிக்கும் படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்குக் காரணம் என்னவென்றால், யாரோ ஒருவர் கொடுக்கும் எந்த பானத்தையும் ராஜ குடும்பத்தினர் வாங்கி குடிக்கக்கூடாது. ஒருவேளை அதில் விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்!
Credit: Getty
உடை கட்டுப்பாடுகள்
இளவரசிகள் கேட் ஆனாலும் சரி, மேகன் ஆனாலும் சரி, பொது நிகழ்ச்சிகளில் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும்போது, ஒருவிதமாக கால்களை சேர்த்து, சாய்த்துவைத்து அமர்ந்திருப்பதைக் காணலாம். ராஜ குடும்பத்துப் பெண்கள் உட்காரும்போது, அவர்களுடைய உள்ளாடைகள் தெரிந்துவிடக்கூடாது என்பதுதான் அதற்குக் காரணம்.
அதேபோல, ராஜ குடும்ப சிறுவர்கள் எட்டுவயதுவரை அரைக்கால்சட்டைதான் அணியவேண்டும். அதற்குப் பிறகுதான் முழுக்கால்சட்டை அணிய அனுமதி.
திடீரென கழிவறைக்குச் செல்லவேண்டுமானால் என்ன செய்வார்கள்?
ராஜ குடும்பத்தினரின் முக்கிய கடமைகளில் ஒன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது. சரி, அவர்களும் மனிதர்கள்தானே, பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருக்கும் நேரத்தில் திடீரென சிறுநீர் கழிக்கவேண்டிவந்தால் எனன் செய்வார்கள்.
அதற்கும் மரபு உள்ளதாம். அதாவது, ராஜ குடும்பத்தினர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது திடீரென கழிவறையைப் பயன்படுத்தவேண்டிவந்தால், யாரிடமும் எதுவும் சொல்லத் தேவையில்லை.
’எக்ஸ்யூஸ் மீ’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் கழிவறைக்குச் செல்லலாமாம்!
Credit: Getty
Credit: Reuters
Credit: Getty