கடைசி வரை கொல்கத்தாவுக்கு தான் விளாடுவேன்! மும்பையை கதறவிட்ட இளம் வீரர் சொன்ன காரணம்: நெகிழ்ந்து போன ரசிகர்கள்
மும்பை அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய கொலக்த்தா வீரர் வெங்கடேஷ் அய்யர், கடைசி வரை கொல்கத்தா அணிக்கு தான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, இப்போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த 155 ஓட்டங்களை, கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி இப்படி அசால்ட்டாக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம், அந்தணியின் துவக்க வீரரான இளம் வீரர் வெங்கடேஷ் அய்யர் தான், இவருக்கு இது தான் முதல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி ஆகும்.
இப்போட்டியில் இவர் 30 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்தார்.
அதில் 4 பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் அடங்கும், இவரின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த முன்னணி வீரர்கள் பலரும், இவரை வருங்கால இந்திய அணியின் நட்சத்திரம் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.
?அட அட இவ்வளவு அருமையா தமிழ் பேசுறாரு #VenkateshIyer ?
— Star Sports Tamil (@StarSportsTamil) September 24, 2021
நேற்றைய #MIvKKR ஆட்டம் முடிந்த பிறகு @KKRiders இன் அதிரடி Opener ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி வித் @mukundabhinav & @Bhavna__B ?️#VIVOIPL #கிரிக்கெட்ட்விட்டர் pic.twitter.com/CMnYpGMoxz
இந்நிலையில் வெங்கடேஷ் அய்யர் இது குறித்து கூறுகையில், நான் கடைசி வரை கொல்கத்தா அணிக்காகவே விளையாட ஆசைப்படுகிறேன்.
ஏனெனில் நான் ஒரு கங்குலியின் தீவிர ரசிகன், அவர் இந்தணிக்கு ஆரம்பத்தில் கேப்டன் ஆக இருந்தார். அவர் மீது கொண்ட தீயாத வெறியாலே நான் வலது கை பேட்ஸ்மேனில் இருந்து இடது கை பேட்ஸ்மேனாக மாறினேன் என்று கூறியுள்ளார்.