முடிவுகளை எதிர்பார்த்து நான் பந்துவீசுவது இல்லை: இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா
முடிவுகளை எதிர்பார்த்து நான் பந்துவீசுவது இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களை எடுத்தது.
பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 272 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியதில் ஜஸ்பிரீத் பும்ரா-வின் பங்கு மிகப் பெரியது.
10 ஓவர்கள் வீசிய பும்ரா 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ஓட்டங்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முடிவுகளை எதிர்பார்ப்பது இல்லை
இந்நிலையில் பேட்டிக்கு பிறகு பேசிய ஜஸ்பிரீத் பும்ரா, நான் முடிவுகளை எதிர்பார்த்து எப்போதும் பந்துவீசுவது இல்லை. 4 விக்கெட்டுகளை எடுத்ததால் மகிழ்ச்சியாக நான் இருக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. 4 விக்கெட்டுகளை எடுத்து பெரிதாக சாதித்து விட்டேன் என்றும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும் மைதானம் எப்படி இருக்கிறது என்பதை கணித்து அதற்கு ஏற்றவாறு பந்துவீச வேண்டும், அதுவே மிகவும் முக்கியம்.
எனவே தொடர்ந்து சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |