இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரணம்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.1,850 கோடி நிவாரண தொகையை அறிவித்துள்ளது.
இலங்கையை சூறையாடிய டிட்வா
டிட்வா புயல் கடுமையாக தாக்கியதில் மிகப்பெரிய இழப்புகளை இலங்கை எதிர்கொண்டது.
பெரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் பொதுமக்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது சொத்துக்களை சின்னாபின்னமாக்கின.

சுமார் 643 பேர் இலங்கை புயல் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் வீடுகளை மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் உதவி
இந்நிலையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை சரி செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் பெரும் தொகையை நிவாரணமாக அறிவித்துள்ளது.
அதன்படி, புயல் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக சுமார் ரூ. 1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டொலர்) அவசரகால நிதியை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |