இமான் கூறியது பொய் என்பதை உணர்த்தவே சிவகார்த்திகேயன் இப்படி டிராமா போட்டுள்ளார்- பிரபல பத்திரிகையாளர்
சிவகார்த்திகேயன் இமான் விவகாரத்தில் இமான் கூறியது பொய் எனவும், சிவகார்த்திகேயன் டிராமா போடுகிறார் எனவும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனது பேட்டியில் உடைத்துப் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் விவகாரம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் இமான் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டிக் கொடுத்தார்.
இந்த நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி இமானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘சரி, தவறு எது என்பது மனிதர்களைத் தாண்டி இறைவனுக்கு தெரியும். இது எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்’ என்று கூறினார்.
ஆனால், இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை எதுவும் பேசவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த தீபாவளி பண்டிகைக்கும் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்துக் கூறினார்.
பத்திரிக்கையாளர் கூறியதாவது...
இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி தனது சமீபத்திய பேட்டியில் ''சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சினையில் உள்ள உண்மை என்ன என்பது பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும்.
அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டது அதை சரி செய்வதற்காகத்தான் அந்த போட்டோ.
இமான் சொன்ன குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என்னால் குடும்பத்தோடு இப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே இமான் சொன்னது பொய் என்பதை உணர்த்தவே சிவகார்த்திகேயன் இப்படி டிராமா போட்டுள்ளார்'' என்று கூறியுள்ளார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |