2020ஆம் ஆண்டில் புலம்பெயர்தல் மீது கொரோனா ஏற்படுத்திய கடுமையான தாக்கம்
கொரோனா காரணமாக, 2020ஆம் ஆண்டில் புலம்பெயர்தல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் சமீபத்தைய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
2020இல், பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளுக்கு நிரந்தர புலம்பெயர்தல் 30 சதவிகிதம் அளவுக்கும் அதிகமாக குறைந்துள்ளது. 2003க்குப் பிறகு, 2020இல்தான் நிரந்தர புலம்பெயர்தல் மிகவும் குறைவாக இருந்துள்ளது.
கொரோனா சூழல், கனடா உட்பட பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் புலம்பெயர்தல் மிகப்பெரிய அளவில் குறைய காரணமாக அமைந்துள்ளது.
2020இல், 3.7 மில்லியன் மக்கள் 25 பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள். 2003க்குப் பிறகு, 2020இல்தான் நிரந்தர புலம்பெயர்தல் இவ்வளவு குறைவாக இருந்துள்ளது.
குடும்ப புலம்பெயர்தலில் 35 சதவிகிதம், தற்காலிக பணியாளர் புலம்பெயர்தலில், குறிப்பாக கனடாவில், -37 சதவிகிதம் என பல வகை புலம்பெயர்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கல்வி அனுமதி வழங்கலைப் பொருத்தவரையில் 2020இல் 70 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் புதிதாக புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் அளவும், 2020இல் 31 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது, மறுகுடியமர்தல் 65 சதவிகிதம் குறைந்துள்ளது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளின் அறிக்கை, 2020 முழுவதிலும், 2021இலும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக நாடுகளுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைவது தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் புலம்பெயர்தல் குறைந்ததாக தெரிவிக்கிறது.