புலம்பெயர்ந்தோரால் ஜேர்மன் தேர்தல் முடிவுகளை முடிவு செய்ய முடியும்: ஆனால்...
ஜேர்மன் வாக்காளர்களில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்.
அவர்களால் ஜேர்மன் தேர்தல் முடிவுகளை முடிவு செய்ய முடியும். ஆனால், அவர்கள் பல முன்னணி கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிரச்சினைகளை தீர்க்க யாரால் முடியும்?
ஜேர்மனியில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தக் கட்சியால் முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, எந்தக் கட்சியாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார்கள்.
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட வாக்காளர்களிடையே, பணவீக்கம் மற்றும் பொருளாதாரம் ஆகியவையே கவலையை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
பணி ஓய்வு குறித்து தங்களுக்கு அதிக கவலை உள்ளதாக புலம்பெயர்தல் பின்னணி கொண்ட வாக்காளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அத்துடன், குற்றச்செயல்களால் தாங்கள் பாதிக்கப்படுவது குறித்தும் அவர்களுக்கு கவலை உள்ளது.
துருக்கியிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் ஒதுக்கப்படுவதாகவும் கருதுவதால், வாக்களிக்க அவர்களுக்கு விருப்பமே இல்லை.
இப்படியே பலதரப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கும், எந்தக் கட்சியாலும் ஜேர்மனியில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்ற கருத்து உள்ளதால், அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்கின்றன ஆய்வுகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |