உணவகங்கள் முதல் மருத்துவமனைகள் வரை... ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு
Immigrants plug Germany's crucial work shortages from kitchens to hospitals: ஜேர்மனியில், உணவகங்கள் முதல் மருத்துவமனைகள் வரை, பணியாளர் தட்டுப்பாடுகள் நிலவும் இடங்களை நிரப்புவது புலம்பெயர்ந்தோர்தான்.
ஜேர்மனியில், உணவகங்கள் முதல் மருத்துவமனைகள் வரை, தட்டுப்பாடுகள் நிலவும் இடங்களை புலம்பெயர்ந்தோரே நிரப்புவதாக பிரபல ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உணவகங்கள் முதல் மருத்துவமனைகள் வரை...
2025ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜேர்மனியில் உணவகங்களில் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்தான் என்கிறது, தி லோக்கல் ஊடகம்.

அதேபோல, செவிலியர்கள் மற்றும் பல் மருத்துவர்களில் மூன்றில் ஒரு பங்கு, புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்தான்.
உணவகத்துறை, தயாரிப்பு, மருத்துவம், போக்குவரத்து என, ஜேர்மனியில் எந்தப் பணியிடங்களையெல்லாம் நிரப்புவதற்கு போதுமான ஜேர்மன் பணியாளர்கள் இல்லையோ, அந்த இடங்களையெல்லாம் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்தான் நிரப்பியுள்ளார்கள்.
இந்த உண்மை, திங்கட்கிழமையன்று ஜேர்மனியின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட, 2025ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகளிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனி புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது. புலம்பெயர்தல் கொள்கைகள் தொடர்பில் பெருமளவில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த செய்தி, புலம்பெயர்ந்தோரும், அவர்களுடைய பிள்ளைகளும், ஜேர்மனியின் பணியாளர் மேலாண்மைக்கும் பொருளாதாரத்துக்கும் எவ்வளவு அவசியம் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.