புலம்பெயர்ந்தோருக்காக ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்ட வேலைவாய்ப்புக் கண்காட்சி
ஜேர்மனியில் சுமார் 2 மில்லியன் அகதிகள் வாழ்கிறார்கள், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
வேலை வழங்கும் நிறுவனங்கள் பல, பணியாட்கள் கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கின்றன.
ஆக, வேலையும் இருக்கிறது, வேலை தேடும் புலம்பெயர்ந்தோரும் இருக்கிறார்கள். ஆனால், வேலை தேடுவோருக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை உள்ளது!
பிரம்மாண்ட வேலைவாய்ப்புக் கண்காட்சி
ஆக, இந்த இரு தரப்பினரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் சிலர். விளைவு, ஒரு பிரம்மாண்ட வேலைவாய்ப்புக் கண்காட்சி ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
DHL, McDonalds, IKEA மற்றும் Siemens Energy உட்பட 40 நிறுவனங்களிலிருந்து வேலை வழங்குவோர் இந்த வேலைவாய்ப்புக் கண்காட்சியில் ஒன்று திரள, மொழிப்பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு கூட்டம் மொழிபெயர்ப்பாளர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் இந்த புலம்பெயர்ந்தோருக்கு CV தயாரிப்பதில் உதவுவார்கள். இன்னொரு பக்கம், நேர்காணல்கள் நடைபெறுகின்றன.
விடயம் என்னவென்றால், ஜேர்மனியில், 2036வாக்கில் சுமார் 13 மில்லியன் பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.
இன்னொருபக்கம், அதிக எண்ணிக்கையிலான அகதிகள், அதாவது, கடந்த சில ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் அகதிகள் ஜேர்மனியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக, இருதரப்பினரையும் இணைப்பதுதான் தேவையான ஒன்றாக உள்ளது.
ஆக, நிர்வாக ரீதியில் சில நடைமுறை பிரச்சினைகள் இருந்தாலும், இதுபோன்ற வேலைவாய்ப்புக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படுமானால், அவை இந்த இருதரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |