வேலை வாய்ப்புக்கான அழைப்பு வராத நிலையிலும் கனடாவுக்கு புலம்பெயர்வது எப்படி?: விவரம் செய்திக்குள்...
கனடாவிலிருந்து வேலை வாய்ப்புக்கான அழைப்பு வராவிட்டாலும், இரண்டு வழிகளில் கனடாவுக்கு நீங்கள் புலம்பெயரமுடியும்.
குறிப்பாக Saskatchewan மாகாணத்தில் நீங்கள் புலம்பெயர்ந்து வாழ, பணி செய்ய விரும்பினால் அதற்கு வாய்ப்பு உள்ளது.
வேலை வாய்ப்புக்கான அழைப்பு வராவிட்டாலும் வெளிநாட்டவர்கள் புலம்பெயர சில திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று The Saskatchewan Immigrant Nominee Program (SINP)
Provincial Nominee Programs (PNP) எனப்படும் திட்டத்தில் பங்கேற்றுள்ள மாகாணங்கள் சில பொருளாதார புலம்பெயர்வோரை ஆண்டுதோறும் நிரந்தர வாழிடத்துக்கு நாமினேட் செய்ய முடியும்.
ஆனால், அதற்கான விதிமுறைகள் மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசமாக இருக்கும்.
PNP திட்டத்தின் கீழ் நீங்கள் கனடாவுக்கு புலம்பெயர, நீங்கள் முதலில் அந்த குறிப்பிட்ட மாகாணத்தால் நாமினேட் செய்யப்படவேண்டும்.
கனடாவில் வேலை வாய்ப்புக்கான அழைப்பு வராத நிலையிலும், The Saskatchewan Immigrant Nominee Program (SINP) என்ற திட்டத்தின் கீழ் கனடாவுக்கு புலம்பெயர்வது எப்படி?
முதலாவதாக, வேலை வாய்ப்புக்கான அழைப்பு வராத நிலையிலும், கனடாவுக்கு புலம்பெயர்வதற்கான வழிமுறை, Saskatchewan Express Entry-linked stream என்னும் திட்டமாகும். ஆனால், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, federal Express Entry அமைப்பில், உங்கள் profile ஆக்டிவாக இருக்கவேண்டும் என்பது அவசியம்.
ஆக, நீங்கள் Express Entry profile ஒன்றை உருவாக்கி, Saskatchewanஇல் குடியமர்வதற்கான உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவேண்டும்.
இரண்டாவது வழிமுறை, Saskatchewan Occupation In-Demand stream என்பதாகும்.
இத்திட்டம், திறன்படைத்த பணியாளர்களை கனடாவுக்கு கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம். இதற்கு நீங்கள் Express Entry profile ஒன்றை உருவாக்கவேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஒரே தகுதி, நீங்கள் Saskatchewan’s Occupations In-Demand list என்ற பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளில் ஒன்றில், குறைந்தது ஒரு வருட அனுபவமாவது கொண்டவராக இருக்கவேண்டும் என்பதுதான்.
இந்த ஆண்டு, Saskatchewan Express Entry திட்டத்தின் கீழ் 2,733 பேருக்கும் Occupations In-Demand திடத்தின் கீழ் 3,433 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விவரங்களுக்கு...
https://www.cicnews.com/2021/10/immigrate-to-canada-without-a-job-offer-saskatchewan-pnp-1019380.html#gs.e2gvze