சமீப ஆண்டுகளில் பிரித்தானியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் இதுதான்... வெளியான தரவுகள்
கடந்த 2016 க்குப் பிறகு முதல் முறையாக பிரித்தானியா மிகவும் முக்கியமானதாகக் கருதும் பிரச்சினைகளின் பட்டியலில் குடியேற்றம் முதலிடத்தில் உள்ளது.
மிகப்பெரிய பிரச்சனையாக
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது முதல், ஆகஸ்டு மாதத்தில் தீவிர வலதுசாரிகளால் பிரித்தானியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள், புலம்பெயர் மக்கள் தாக்கப்படும் நிலையும் உருவானது.
வெளியான தரவுகளில் சுமார் 34 சதவிகித மக்கள் குடியேற்றமே மிகப்பெரிய பிரச்சனையாக கருதுகின்றனர். 30 சதவிகிதம் பேர்கள் மருத்துவம் என்கிறார்கள், 29 சதவிகிதத்தினர் பொருளாதாரம் என குறிப்பிட்டுள்ளனர். குற்றச்செயல்கள் என 25 சதவிகிதத்தினர் பதிவு செய்துள்ளனர்.
விலைவாசி உயர்வு என 20 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். 2022ல் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை என்பது 764,000 என்றே தெரிய வந்துள்ளது.
காரணங்களில் ஒன்றாக
2023ல் இது 685,000 என சரிவடைந்தது. இந்த மாதம் பல நகரங்கள் மற்றும் டவுன்களில் நடந்த கலவரத்திற்குப் பிறகு குடியேற்றம் குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குடியேற்றம் தொடர்பான கவலைகளே 2016ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |