பிரித்தானியாவின் பணவீக்கத்தைக் குறைக்க புலம்பெயர்தல் உதவும்
பிரித்தானிய பிரதமரும், முன்னாள் மற்றும் இந்நாள் உள்துறைச் செயலரும், புலம்பெயர்தலைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
முதலில் சட்டவிரோத புலம்பெயர்தலைக் குறை சொன்னார்கள். இப்போது, சட்டப்படியான புலம்பெயர்தலையும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், பிரித்தானியாவின் பணவீக்கத்தைக் குறைக்க புலம்பெயர்தலால் முடியும் என்று கூறியுள்ளார் இந்திய வம்சாவளி அமெரிக்க பொருளாதார நிபுணர் ஒருவர்.
பிரித்தானியாவின் பணவீக்கத்தைக் குறைக்க புலம்பெயர்தலால் முடியும்
பிரித்தானியாவின் பணவீக்கத்தைக் குறைக்க புலம்பெயர்தலால் முடியும் என்று கூறியுள்ளவர் சாதாரணமான ஒருவர் அல்ல. அவர் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) என்ற அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஆவார்.
அவரது பெயர் கீதா கோபிநாத்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பிரித்தானியாவில் சட்டப்படியான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறது என்கிறார்.
கீதாவோ, பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பணியாளர்கள் பிரித்தானியாவுக்கு வருவதில் நன்மைகள் இருக்கின்றன என்கிறார்.
வெளிநாட்டுப் பணியாளர்கள் பிரித்தானியாவுக்கு வருவதில் நன்மைகள்
எந்தெந்த துறைகளில் தற்போது பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறதோ, அந்த இடங்களை பிரித்தானியாவுக்கு வரும் பணியாளர்களைக் கொண்டு நிரப்பினால், அது பணவீக்கத்தைக் குறைக்க உதவும் என்கிறார் கீதா.
ஆக, வெளிநாட்டுப் பணியாளர்கள் பிரித்தானியாவுக்கு வருவதில் நன்மைகள் இருக்கின்றன என்று நான் கருதுகிறேன் என்கிறார் அவர்.